அழகுத்தமிழில்அம்மனின்108போற்றிகள்

1. ஓம் அண்ணாமலையில் அமர்ந்தாய் போற்றி
2. ஓம் அலகு அணிந்தார்க்கு அருள்வாய் போற்றி
3. ஓம் அலர்மேலு மங்கையும் ஆனாய் போற்றி
4. ஓம் அறுகோணத்து உள்ளிருக்கும் ஆதி போற்றி
5. ஓம் அனலும் தணலும் ஆவாய் போற்றி
6. ஓம் அன்னம் அளிக்கும் அன்னமே போற்றி
7. ஓம் ஆதிசிவன் தேவி அம்மையே போற்றி
8. ஓம் ஆதியில் உமையாய் ஆனாய் போற்றி
9. ஓம் ஆயிரம் கண்ணுடை அம்மா போற்றி
10. ஓம் ஆரணிப் பாளையத்து அம்மா போற்றி

11. ஓம் ஆறுதப்பு நூறுபிழை பொறுப்பாய் போற்றி
12. ஓம் ஆறு ஆதாரமாம் அணங்கே போற்றி
13. ஓம் ஆற்று மணல் லிங்கம் அமைத்தாய் போற்றி
14. ஓம் ஈசன் பங்கில் இருப்பாய் போற்றி
15. ஓம் உடுக்கையில் பாம்பை உயர்த்தாய் பொற்றி
16. ஓம் உன்னைப் பணிந்தவர்க்கு உற்ற துணை போற்றி
17. ஓம் ஊத்துக்காட்டின் உறவே போற்றி
18. ஓம் எங்கும் நிறைந்த நிறைவே போற்றி
19. ஓம் எச்சிலும் தீட்டும் ஏற்பாய் போற்றி
20. ஓம் எட்டெழுத்தாகி இனிப்பாய் போற்றி

21. ஓம் எல்லா உலகும் ஈன்றாய் போற்றி
22. ஓம் எல்லார்க்கும் தாயாய் இருப்பாய் போற்றி
23. ஓம் ஏழையர்க்கு அடைக்கலம் ஆனாய் போற்றி
24. ஓம் ஒப்பேதுமில்லா உயர்வே போற்றி
25. ஓம் ஓங்காரமென்னும் உருவே போற்றி
26. ஓம் கச்சிப்பதியின் காமாட்சி போற்றி
27. ஓம் கடும்பாடி எல்லையெலாம் காப்பாய் போற்றி
28. ஓம் கடைக்கண் நோக்கம் அருள்வாய் போற்றி
29. ஓம் கண்ணபுரத்தின் காரணி போற்றி
30. ஓம் கரகத்தில் அமரும் கருமாரி போற்றி

31. ஓம் கலியுகம் கண்ட திருபுரை போற்றி
32. ஓம் கற்பகம் அருளும் காமதேனு போற்றி
33. ஓம் கனகசபை நடத்தும் கபாலி போற்றி
34. ஓம் காசிவன நாட்டிலே கன்னியாகுமரி போற்றி
35. ஓம் குப்பத்திருக்கும் கொலுவே போற்றி
36. ஓம் கும்பத்தின் மீதிருந்து கொஞ்சுவாய் போற்றி
37. ஓம் கைலாசத்தின் காவலே போற்றி
38. ஓம் கோலியனூரின் கொலுவே போற்றி
39. ஓம் சந்நிதிக்கெல்லாம் சந்நிதி போற்றி
40. ஓம் சந்தேகம் நீக்கும் சாயுச்சியே போற்றி

41. ஓம் சப்தகன்னியாய்ச் சமைந்தாய் போற்றி
42. ஓம் சமயபுரத்தின் தமிழே போற்றி
43. ஓம் சாம்பிராணி வாசமாய்ச் சார்வாய் போற்றி
44. ஓம் சிங்கம் ஏறும் சிறப்பே போற்றி
45. ஓம் செக்கச் சிவந்த சிங்காரி போற்றி
46. ஓம் செடிலும் தேருமாய்ச் சிறப்பாய் போற்றி
47. ஓம் சூலம் ஏந்தும் சுடரே போற்றி
48. ஓம் சூனியம் எல்லம் சுடுவாய் போற்றி
49. ஓம் சேலம் கோட்டைச் சிறப்பே போற்றி
50. ஓம் தண்டு மாரியாய்த் தழைப்பாய் போற்றி

தொடர்ச்சி